தேவையானவை:
அரிசி --------------------------- = 2 கப் ( 2 சுட்டி or padi)
துவரம் பருப்பு -------------- = 1 கப் ( 1 சுட்டி)
வெங்காயம் ----------------- = 3 எண்ணம் (பெரியதாக நறுக்கியது)
பூண்டு ------------------------- = 15 பளு (15 pieces – slice ah narukunathu)
பச்சை மிளகாய் ----------- = 5 எண்ணம் (பெரியதாக நறுக்கியது)
புளி கரைசல் --------------- = புளிப்பு தேவைக்கேற்ப … ( 2 to 3 தக்காளி சேர்த்து கொள்ளவும்)
மிளகாய் தூள் -------------- = 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் ---------------- = 1 டீ ஸ்பூன்
கருவேப்பில்லை --------- = தாளிக்க
கொத்துமல்லி தலை --- = கார்னிஷ் பண்ண
கடுகு ------------------------- = தாளிக்க
உப்பு -------------------------- = ருசிக்கு ஏற்ப
ஆயில் ---------------------- = 4 to 5 டேபிள் ஸ்பூன்
முதலில் செய்ய வேண்டியது:
முதலில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைங்கள்… பின்னர் அரை மணிநேரம் கழித்து .... அந்த அரிசியின் உள்ளேயே பருப்பு சேருங்கள்… இரண்டும் பிணைந்து களைந்து எடுங்கள்.
இப்பொழுது அரிசி பருப்பு ரெண்டும் நல்ல களைந்து வைத்து விட்டு நம் சமையலை தொடங்கலாம்.
சமைக்கும் முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வையுங்கள்… இப்பொழுது குக்கரில் எண்ணையை விடவும். எண்ணை சூடானதும் அதில் கடுகை போடுங்கள். கடுகு பொறிஞ்சதும், வெங்காயம், கறிவேப்பிலை பசைமிள்காய் எல்லாம் சேர்த்துக்கொள்ளவும். அதை அரை மணி நேரம் சமைத்த பின்..... பூண்டு சேர்த்துவதக்கவும்
இப்பொழுது புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும்..... கொஞ்சம் நன்றாக கொதித்ததும்....உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.....
இப்பொழுது அரிசி பருப்பை இதனுடன் சேர்த்து, நன்றாக கிளறி விடவும். இதனுடன் தண்ணிர் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். இப்பொழுது உப்பு, காரம் சுவையை சரி பார்த்துக் கொள்ளுங்கள். போதவில்லை என்பவர்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.
(வழக்கமாக 1 சட்டி அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீர் விடுபவர்கள்.... இங்கே 2 சட்டி அரிசிக்கு 4 தம்ளர் தண்ணீர் + பருப்பு சேர்ப்பதால், 1.5 அல்லது 2 தம்ளர் தண்ணீர் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.)
இப்பொழுது பாதி கொத்தமல்லி தலை சேர்த்து குக்கரை முடி 4 லிருந்து 5 விசில் விட்டு இறக்கவும். ஆவி இறங்கவும் திறங்கள்... கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை கிண்டி விட்டு சுட சுட சுவைத்தால்... அதன் சுவை மிக நன்றாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...
( CURD, GHEE, PICKLES are best combination to eat with)..
குறிப்பு: புளிக்கு பதில் தக்காளி சேர்த்துக் கொள்ளும் போது கொஞ்சம் தேங்காய் துருவி போட்டு செய்தால் அது தனி சுவையாக இருக்கும்.
சமைத்து பார்த்து ருசித்து சொல்லுங்கள் நண்பர்களே........
என்றும் அன்புடன்
ரெஜினா
***********************************************************************
என்ன வாசகர்களே, படித்து பார்த்துவுடன் சாப்பிட அசை வந்து விட்டதா..... இப்பொழுதே தேவையானதை வீட்டுக்கு வங்கி செல்லுங்கள். சமைத்து, ருசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நீங்களும் இதை போன்ற குறிப்புக்களை அனுப்புங்கள்.
No comments:
Post a Comment