அத்தியாயம் ஒன்று
மாலை நேரம்....
சூரியன் தங்கநிறத்தில் ஜொலித்து கொண்டு கடல் அடியில் இறங்கினான். அதன் பிரதிபலிப்பாக கடல் அலைகள் தங்க நிறத்தில் எழுந்து ஆர்பரித்தன. இந்த காட்சியை காணும் அவளது விழிகளிலும் கண்ணீர் திவலை எழுந்து உருண்டோடி கன்னத்தில் தவழ்ந்தது.
அவள் பெயர் மலர்மதி. சமீபகாலமாக நடந்த ஒரு விபத்தில் தன்னை பற்றிய 3 வருட நினைவுகளை இழந்துவிட்டாள். 3 வருடத்தில் என்னென்ன நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை. அனால், மனதில் மிக பெரிதாக ஒன்றை இழந்து விட்ட உணர்வு மட்டும் எழுந்து எழுந்து... கடல் அலை போல் மனதில் முட்டுகிறது. அதன் தாக்கம் தான் இந்த அழுகை...
இவளுக்கு 50 அடி துரத்தில் அந்த வாலிபன் நின்றிருந்தான். அவளை பார்த்து ரசித்தவன் மனதில் பலவிதமான எண்ணங்கள் உதயம் ஆகின... குறிப்பாக அவளது அழகு அவனை சில்லிட வைத்தது. வட்ட முகத்தில் கன்னத்தில் இருந்து நாடி பாகம் குறுகி வந்திருந்தது. வளைந்த புருவத்தில் சிறியதாக உற்பத்தி ஆகி ஒரு மொட்டு போன்று முடிந்திருந்த மூக்கு. சின்ன சின்ன வரிகளோடு சிங்காரமான உதடு. அவளது புருவத்தின் ஒரு ஓரத்தில் ஒரு தழும்பு. அந்த தழும்பு கூட அவளுக்கு ஒரு அழகாக தெரிந்தது. இதை அவன் துரத்தில் இருந்து பார்க்கவில்லை. அவளை கடந்து செல்லும் போது நின்று பார்த்தான். இப்போது தள்ளி நின்று அவளை வேடிக்கை பார்க்கிறான்.
"ஹலோ, ஸ்டீபன் இப்ப எப்படி இருக்கீங்க...?" குரல் கேட்டு பின்னால் திரும்பி பார்த்தான் அவன். ஆம். அவன் பெயர் ஸ்டீபன். கூப்பிட்டது அவனது குடும்ப டாக்டர் மோகன்.
"வாங்க டாக்டர், I am fine. மெண்டலி தான் கொஞ்சம் அப்நார்மலா பீல் பன்றேன்.
"ஒ.. அப்படியா. வேற ஒன்னும் பிரச்னை இல்லையே."
"வேற ஒன்னும் இல்லை டாக்டர். டாக்டர் அந்த பெண்ணை பாருங்களேன்... ரெம்ப அழகான பொண்ணு. பட், ஏதோ ரெம்ப சோகம் போல."
டாக்டர் அவன் கட்டிய மலர்மதியை பார்த்தார். டாக்டரின் முகம் ஒரு மாறுதலுக்கு போனது.
அப்போது மலர் திடீர்ரென மயங்கி விழுந்தாள்.
ஸ்டீபன் வேகமாக அவளை நோக்கி ஓடினான். டாக்டர் பின்னால் ஒடி வந்தார். மலரை சுற்றி மக்கள் கூட்டமாக கூடினர்.
"ஸ்டீபன், இந்த பெண்ணை தூக்கு. நம்ம ஹாஸ்பிடலுக்கு, கொண்டு போவோம்.
டாக்டரும், ஸ்டீபனும் மலரை தூக்கி கொண்டு போக, கொஞ்ச தூரத்தில் ஐஸ் கிரீம் வாங்கி கொண்டு இருந்த மலரின் அண்ணன், விக்னேஷ் விபரீதத்தை உணர்ந்து அவர்களை நோக்கி ஒடி வந்தான்.
டாக்டர் கரை நெருங்கி இருக்க...
"நீங்க யார்? என் தங்கச்சியை எங்க கொண்டு போறீங்க?" விக்னேஷ் கோபமாக கத்தினான்.
காரில் மலரை கிடத்தி விட்டு இருவரும் திரும்பி பார்க்க, அவர்களை பார்த்ததும் விக்னேஷ் முகத்தில் அதிர்ச்சி அலைகள் எழும்பின.
டாக்டரின் முகத்திலும் அதே அதிர்ச்சி அலைகள்.
ஸ்டீபன் எந்த மறுத்தாலும் இல்லாமல் இருந்தான்.
"ஒ.. சாரி சார். உங்க சிஸ்டர் மயங்கி விழுந்ததால... உதவலாம்னு நெனச்சோம்... இவர் சிட்டில பெரிய டாக்டர். வாங்க நீங்களும். டாக்டர் என்ன வேடிக்கை பாக்குறிங்க. உள்ள வாங்க. சார் நீங்களும் தான்." ஸ்டீபன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டே சொன்னான்.
விக்னேஷ் ஒன்றும் பேசாமல் உள்ளே ஏறினான். டாக்டரும் ஏறிக்கொள்ள, கார் டாக்டரது மருத்துவ மனை நோக்கி போனது.
No comments:
Post a Comment