Sunday, November 28, 2010

எங்கே என் காதல்? - 2

அத்தியாயம் இரண்டு
 கல்யாணமாகி இன்றைக்கு ஒருவருடம் நிறைவு ஆகிறது. இன்று முதல் திருமண நாள். அந்த மகிழ்ச்சி மனம் நிறைய ராஜ் காரை ஓட்டினான். புதிதாக வாங்கிய பட்டு புடவை அவனருகில் தவழ்ந்தது. காரை வீட்டில் பார்க் செய்ததும் உள்ளே உற்சாகமாக ஓடினான்.

      "மலர், மலர் எங்கே இருக்கிறாய்?"

  "இங்க தான இருக்கேன்" படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தபடி மலர் கூறினாள்.

     "இன்னைக்கு நைட்க்கு இப்பவே பெட்ரூம் ரெடி பண்றியா டியர்...."

    "ஐயாவுக்கு, எப்ப பாரு... அதே நினைப்புதான....போங்க போய் குளிச்சிட்டு வாங்க..."

  "பிறகு... மனுசனுக்கு என்ன தேவைன்னு சொல்லு... உணவு, உடை, உறைவிடம், இருந்த போதுமா... உறவுன்னு ஒன்னு வந்தாதானே வாழ்கை பூர்த்தி ஆகுது..."

   "காதலிக்கும் போது கவிதைய பேசினிங்க.. இப்ப கல்யாணம் ஆன பின்னாடி தத்துவமா பேசுறிங்க..."

  "நான் மட்டுமா... சாக்ரடீஸ் இருக்காருல சாக்ரடீஸ்..... அவர்கூட ..." அவன் பேசி முடிப்பதற்குள் மலர் அவன் வாயை பொத்தினாள்.

    "போதும்.. போதும்... உங்க புராணம் போதும்...  போய் குளிச்சிட்டு வாங்க..."

  "மலர் அதுக்கு முன்னாடி... நீ ரெடி பண்ண பெட்டை ஒரு தடவை பயன்படுத்தி   பார்க்கலாமே..."

    "நோ.. நோ... நெறைய வேலை இருக்கு.. போங்க... போங்க..."

    "ம்கும்... ம்கும்... மாட்டேன்...."

  "இப்ப போங்கனா ....." குழந்தை போல அடம் பிடிக்கும் அவனை பாத்ரூம் நோக்கி தள்ளி கொண்டு போனாள்.

இரவு நேரம்...
   பௌவுர்ணமி நிலவு... 

  "அப்பப்பா... எவ்வளவு அலைச்சல். கல்யாண நாள் அதுவுமா... இத்தனை ப்ரோக்ராமா... கோவிலுக்கு போயிட்டு.... அப்பறம் முதியோர் இல்லம் போய்... அப்பறம், அனாதைகள் இல்லம் போய்.... எதுக்காக இத்தனை வேண்டுதல்..."
   ராஜ் கைலிக்கு மாறியபடி கேட்டான்.

  "எல்லா இடத்துக்கு போனதுக்கும் ஒரே கரணம் தான். இன்னைக்கு நம்ம கல்யாண நாள்."

 "அது சரி. அதுக்கு முதியோர் இல்லத்திற்கும், ஆனதை அசிரமதிற்கும், நம்ம கல்யாண நாளுக்கும் என்ன சம்மந்தம்?..."
   "வேற என்ன. உங்களுக்கும் அம்மா அப்பா இல்லை. எனக்கும் அம்மா அப்பா இல்லை... இந்த மாதிரி கவனிக்காம விட்ட பெரியவங்களை நாம போய் பார்க்கும் போது அவங்க ஆசிர்வாதம் கிடைக்கும் இல்லையா.. அதான்.
 அனாதை குழந்தைகளை கவனிக்கும்போது ஆண்டவன் நமக்கும் நல்ல குழந்தை கொடுப்பன்னு ஒரு நம்பிக்கை..."

   "கூடிய சீக்கிரம் உனக்கு பெஸ்ட் சமூகசேவகி விருது தந்திருவாங்க... நான் எனக்கு தெரிஞ்சி... சாமீ கும்பிட்டது கிடையாது... நான் கூட வந்ததெல்லாம் உனக்காகத்தான்."

    "எனக்கு தெரியாத.... நீங்க வருவது எனக்காகத்தான் என்று. ஐயாவுக்கு, அதுக்கு தான் இந்த பரிசு" மலர் அவனை நெருங்கி அவன் உதடுகளில் அவள் உதட்டை பொறுத்த போன நேரம்,

  "டிரிங்.. டிரிங்..."
 மலர் எரிச்சலோடு போனை எடுத்தாள். 

  "ஹலோ"

  "மேடம், நான் சார் பி.ஏ. சுவாதி பேசுறேன்" மறுமுனையில் குரல் ஒலித்தது.

  "என்ன விஷயம். இந்த நேரத்தில் போன்? அவர் ஆபீஸ்ல இருக்கும் போதே எதுனாலும் பேசி முடிங்க... வீட்டுக்கு கூப்பிடக் கூடாது."

  "இல்லை மேடம்.. சார் ஒரு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தார். அந்த நபரும் வந்து சாரை பார்க்க வெயிட் பன்றார்."

   "யாரா இருந்தாலும் சரி. ராஜ் இப்ப அங்க வர மாட்டார்."
    சொல்லிவிட்டு படக்கென்று போனை வைத்தாள்.

    "யார் அது போன்ல" ராஜ் கேட்டான்...

 "ம்.. உங்க பி.ஏ சுவாதி பேசினா... நீங்க யாருக்கோ அப்பாயின்மென்ட் கொடுதிருக்கிங்கனு கூப்பிடுற..."
     "நான் யாருக்கு... ஒ.. மை. காட்.. செம்புலிங்கம் என்பவர் ஆர்டர் விஷயமா பேசி விட்டு ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னார்...மறந்துட்டேன்."

    ராஜ் திரும்ப கோட் ஷர்ட்டுக்குள் நுழைய ஆரம்பித்தான்.

   "இப்ப நீங்க போக கூடாதுன்னு சொல்றேன்..." கட்டிலில் அமர்ந்து, உடை மற்றும் ராஜை வெறித்தபடி சொன்னாள்.

  "நோ டியர்... அது 10 லட்ச ரூபாய் ஆர்டர். நான் கண்டிப்பா போய் தான் தீரனும்."

  "இப்ப நீங்க போனிங்கனா... அப்புறம் நான் பேச மாட்டேன்..."

  "சாரி... மலர்... நான் போயே ஆகனும். ஜஸ்ட் ஒன் அவர்ல வந்துருவேன். ப்ளீஸ்டா செல்லம்... கோவிச்சுக்காத.."

    ராஜ் அவசர அவசரமாக கிளம்பி ஒடினான்.

  மலர் மணியை பார்த்தாள். கடிகரம் 10 என்று காட்டியது.  ஆசையுடன் கட்டிலுக்கு வந்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கடிகாரத்தில் முட்கள் நகர மாட்டேன் என்று அடம் பிடிப்பது போல இருந்தது.

   10.15....
   10.25....
   10.45....
   11.00...
    மலர் அப்படியே தூங்கி போனாள்.

   12.00 ராஜ் ரெம்பவும் சோர்வாக உள்ளே நுழைந்தான்... தூங்கி கொண்டிருந்த மலர் ராஜ் வரவும் எழுந்தாள்.

   "இது தான் ஒரு மணி நேரமா..."

   "சாரி... மலர்... பார்ட்டி கிளம்பவே பதினொன்னு பத்தானது. அப்பறம்... சுவாதிக்கு பஸ் வேற இல்லை. அதான் அவளை வீட்டில் விட்டு வர நேரம் ஆகி விட்டது."
  மலர் முறைத்தாள்.

  "எதுக்கு இப்படி முறைக்குற..."

 "நானும் உங்களுக்கு பி.ஏ.வா இருந்து தான் உங்களை கல்யாணம் பண்ணினேன். பார்ட்டிடா நீங்க பேசும் போது... அவளை கிளம்ப சொல்லிருக்க்கலாமே... எதுக்கு அவளை காத்திருக்க சொல்லி நீங்க கொண்டு போய் விடனும்."

   "அவளுக்கு வேலை இருந்தது... "

   "அப்படி என்ன வேலை... எனக்கு என்னவோ பயமா இருக்கு..."

   "என்ன பயம்..."

  "நான் ஆபீஸ்ல வேலை பார்த்தப்போ நீங்க என்னை வேலை செய்யவே விட மாட்டிங்க...   அடிக்கடி உங்க ரூம்க்கு கூப்பிட்டுக் கொண்டே இருப்பிங்க... இப்ப அதே மாதிரி சுவாதி உங்க ரூம்ல அடிக்கடி இருக்கிறதா... ஆபீஸ்ல வேலை பார்க்குற ஸ்டாப்ஸ் சொன்னங்க...
அதான் உங்களை அப்பவே போக வேண்டாம்னு சொன்னேன்..."

   " அப்பா நீ என்னை சந்தேகப் படுரியா...."

  "நான் உங்களை சந்தேகப் படலை... சுவாதி பத்தி யாரும் நல்லவிதமா சொல்லலை. அதான் எனக்கு பயம்..."

   "நீ தேவை இல்லாமல் பயப்படுற... சுவாதி அப்படிப் பட்ட பொண்ணு இல்லை. அவள் வோர்க்ல சின்சியர இருக்கிறதுனால அவளுக்கு நான் இன்க்ரிமென்ட் கொடுத்திருக்கேன்.அது பிடிக்காதவங்க அவளை பற்றி உன்னிடம் தவறாக சொல்லிருக்காங்க..."

    "ஒ... அவ நல்ல பொண்ணு தான் இல்லையா..."

   "ஆமா.."

   "அப்பா உங்கள் கோர்ட்ல தோள் பட்டையில் சிவப்பா இருக்கிற பொட்டு யாருடையது."

  "இது... இது.... செம்புலிங்கம் பொட்டு. அவர் கிளம்பும் போது, கட்டி பிடிச்சி தோளில் தட்டி கொடுத்து கிளம்பினர். அது தான்."

   "என்னால நம்ம முடியலை..."

  "மலர்... அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது... உனக்கு அவள் மேல நம்பிக்கை இல்ல விட்டாலும் என் மேல நம்பிக்கை இருக்கணும். அது இல்லேன்னா இந்த வாழ்க்கையை  நாம வாழுவதில் பயனே இல்லை."

  மலர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அதற்கு மேலே பேச விரும்பாமல் அப்படியே படுக்கையில் விழுந்து கண்களை மூடினான். நெடுநேரம் ராஜை வெறித்தபடி மலர் நின்றிருந்தாள். பிறகு, அவளும் படுக்கையில் சாய்ந்தாள்.

2 நாட்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இன்றி அமைதியாக கழிந்தது...

நான்கு மாதம் கழித்து ஒரு பூகம்பம் எட்டி பார்த்தது.

No comments:

Post a Comment