Sunday, November 28, 2010

புகை பிடிக்கும் புண்ணியவான்களே!!!

 நண்பர்களே, நாம் வாழும் இந்த உலகத்தில், பஞ்ச பூதங்களை சார்ந்தே வாழ்கின்றோம்.  அவை இல்லாமல், நாம் இல்லை.


  அத்தகைய பஞ்ச பூதங்களில் நமக்கு மிகவும் முக்கியமானதும், இலவசமாக கிடைக்க கூடியதும் காற்று ஒன்றுதான். காற்று இல்லாமல் நம்மால் சில நிமிடங்களுக்கு மேலே வாழ முடியாது. 


    நண்பர்களே நீங்கள் பிடிக்கும் புகை பழக்கத்தால் இந்த காற்று எவ்வளவு மாசு படுகிறது தெரியுமா.  அதனால், உங்களை சுற்றி உள்ளவர்கள் எவ்வளவு பாதிக்க படுகிறார்கள்.... 


     நண்பர்களே நீங்கள் தாகமாக உள்ளீர்கள். உங்கள் எதிரே தண்ணீர் நிறைந்த குவளை ஒருவர் நீட்டுகிறார். அதை வாங்க நீங்கள் கையை நீட்டுகின்றீர்கள். அப்பொழுது அவர் அந்த தண்ணிரில் காரி உமிழ்ந்து, அதை குடிக்க சொன்னால் எப்படி இருக்கும். யோசனை செய்து பாருங்கள்.


    பொது இடத்தில் புகை பிடிக்கும் நீங்கள் செய்வது இதைத்தான். உயிர் வாழ அவசியமான காற்றை, நீங்கள் மாசுபடுத்தி உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு தருகின்றீர்கள். நீங்கள் வெளியே விடும் புகையால் உங்களை விட பாதிக்க படுபவர்கள்... உங்களை சுற்றி இருப்பவர்களே.... அப்படி செய்யலாமா... இது மிக பெரிய பாவம் இல்லையா.


    நீங்கள் உங்கள் குழந்தைகளின் முன்னால் புகைக்கும் போது அந்த பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலக்கிறது. நீங்கள் குடிப்பதை பார்த்து அதுவும் எதிர் காலத்தில் புகைக்கிறது. நீங்கள் விடும் புகையை சுவசிப்ப்பதால், சிறு வயதிலேயே அவர் உடலை நீங்கள் கெடுக்கவும் செய்கின்றீர்கள்.


  மது அருந்துபவர் கூட தன்னுடைய உடலை தான் கெடுத்து கொள்கிறார். ஆனால், புகை பிடிப்பவர் பக்கத்தில் உள்ளவர் உடல் நலத்தையும் சேர்த்து கெடுக்கிறார். 


   ஆகையால் நண்பர்களே.... புகை பிடிப்பதை தவிருங்கள். முடியாதவர்கள், போது இடத்தில் புகைப் பதை தவிர்க்க வேண்டும். இது நீங்கள், நாட்டுக்கும், உங்கள் வீட்டுக்கும், சமுதாயத்துக்கும் செய்யும் மிக பெரிய சேவை. புகை பிடிக்கும் போது மற்றவர்களுக்கு பாதிக்காதபடி ஒதுங்கி செல்லுங்கள்.



அன்புடன்
JVR

No comments:

Post a Comment