Sunday, November 28, 2010

புகை பிடிக்கும் புண்ணியவான்களே!!!

 நண்பர்களே, நாம் வாழும் இந்த உலகத்தில், பஞ்ச பூதங்களை சார்ந்தே வாழ்கின்றோம்.  அவை இல்லாமல், நாம் இல்லை.


  அத்தகைய பஞ்ச பூதங்களில் நமக்கு மிகவும் முக்கியமானதும், இலவசமாக கிடைக்க கூடியதும் காற்று ஒன்றுதான். காற்று இல்லாமல் நம்மால் சில நிமிடங்களுக்கு மேலே வாழ முடியாது. 


    நண்பர்களே நீங்கள் பிடிக்கும் புகை பழக்கத்தால் இந்த காற்று எவ்வளவு மாசு படுகிறது தெரியுமா.  அதனால், உங்களை சுற்றி உள்ளவர்கள் எவ்வளவு பாதிக்க படுகிறார்கள்.... 


     நண்பர்களே நீங்கள் தாகமாக உள்ளீர்கள். உங்கள் எதிரே தண்ணீர் நிறைந்த குவளை ஒருவர் நீட்டுகிறார். அதை வாங்க நீங்கள் கையை நீட்டுகின்றீர்கள். அப்பொழுது அவர் அந்த தண்ணிரில் காரி உமிழ்ந்து, அதை குடிக்க சொன்னால் எப்படி இருக்கும். யோசனை செய்து பாருங்கள்.


    பொது இடத்தில் புகை பிடிக்கும் நீங்கள் செய்வது இதைத்தான். உயிர் வாழ அவசியமான காற்றை, நீங்கள் மாசுபடுத்தி உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு தருகின்றீர்கள். நீங்கள் வெளியே விடும் புகையால் உங்களை விட பாதிக்க படுபவர்கள்... உங்களை சுற்றி இருப்பவர்களே.... அப்படி செய்யலாமா... இது மிக பெரிய பாவம் இல்லையா.


    நீங்கள் உங்கள் குழந்தைகளின் முன்னால் புகைக்கும் போது அந்த பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலக்கிறது. நீங்கள் குடிப்பதை பார்த்து அதுவும் எதிர் காலத்தில் புகைக்கிறது. நீங்கள் விடும் புகையை சுவசிப்ப்பதால், சிறு வயதிலேயே அவர் உடலை நீங்கள் கெடுக்கவும் செய்கின்றீர்கள்.


  மது அருந்துபவர் கூட தன்னுடைய உடலை தான் கெடுத்து கொள்கிறார். ஆனால், புகை பிடிப்பவர் பக்கத்தில் உள்ளவர் உடல் நலத்தையும் சேர்த்து கெடுக்கிறார். 


   ஆகையால் நண்பர்களே.... புகை பிடிப்பதை தவிருங்கள். முடியாதவர்கள், போது இடத்தில் புகைப் பதை தவிர்க்க வேண்டும். இது நீங்கள், நாட்டுக்கும், உங்கள் வீட்டுக்கும், சமுதாயத்துக்கும் செய்யும் மிக பெரிய சேவை. புகை பிடிக்கும் போது மற்றவர்களுக்கு பாதிக்காதபடி ஒதுங்கி செல்லுங்கள்.



அன்புடன்
JVR

கடல்தாண்டி செல்லும் கனவுகளுடன் நான் ....

gents velinadu poi velaiku porathu oru kastam na..
anga avanga koda poi iruka nama ponunga atha vida pavam
manasula pala kastangal varutham ellathoda sagichutu iruka
palla thozhikaluku
ik kavithaiyai

கண்கள் பேசும் காதல்மொழியும்
கன்னியின் மனதில் தோன்றும் கனவுகளும் 
அழகாய் மலரும் நாளே 
தித்திக்கும் திருமண நாள் !!

கண்களில் சந்தோசம் வருத்தம் 
மாறிமாறி வந்து போக
மனம் கவர்ந்த மணவாளன் கரம் பிடித்து 
தாயே உன்னை தனித்து விட்டு செல்கிறேன் ...

திருமதியாக திருமண உறவு…
வெகுமதியாக வெளிநாடு வரவு..!
தூரமானது அப்பாவின் நகைச்சுவை…
ஏக்கமானது அம்மாவின் அறுசுவை..! 

அரபுமொழி பேசும் அந்நிய
முகம் கண்டு படபடப்பு…
அமுதமொழி பேசும் அன்பு
முகம் தேடி பரிதவிப்பு.. 

உள்ளம் நிறைந்த பூரிப்பில்
உறவுகளோடு விழாக்கள் அங்கே..
உதடு பிரியா புன்னகையில்
புதியவரோடு விருந்துகள் இங்கே 

துவைக்க ,பாத்திரமலச பட்டன்
தட்டும் இயந்திர வாழ்க்கையிங்கே..
அம்மாவுக்கு உதவியாய் துவைத்தலசிய
இனிமையான இயல்பு வாழ்க்கையங்கே.. 

அதிகாலை ஆலய மணி
ஒசை கேட்டது அங்கே..
பின்காலை அலார மணி
ஓசை கேட்கிறது இங்கே.. 

குதூகலமாய் குடும்பத்தோடு நிலாச்சோறு
உண்டு களித்தது அங்கே..
அமைதியாய் கணவரோடு கணினிச்சோறு
உண்டு களிப்பது இங்கே… 

ஆதரவாய் தலை சாய்க்க
அம்மா மடி அங்கே..
தனிமையிலே தலை புதைக்க
தலையணை மடி இங்கே 

அண்டை வீட்டில் அறியா முகங்கள்
பேசவும் முடியா புது மொழிகள்
விடியுமுன் வேலை செல்லும் கணவன்
நடுநிசி வரை வெற்றுச்சுவர்களோடு நான்..!!

இணைய உலாவலில் தொடங்கி
தொலைக்காட்சித் தொடரில் தொலைந்து
தனக்குள் பேசி தானாகச் சிரித்து
தானே சமைத்து தனியாக உண்டு
தனிமையோடுப் போராடினேன் தனியாக...!!

அக்கறைப்படவும் ஆளில்லை
அவசரத்தில் உதவவும் யாருமில்லை
அம்மாவிடம் பேசும் போது மட்டும்
அழுகையை அடக்கம் செய்துவிட்டு
வாய் வலிக்கும் சிரிப்போடு
"ஆகாயம் தொடும் கட்டிடங்கள்
அரண்மனை போல் வீடு
அருமையான நாடு
சொர்க்கத்தில் வாசம்" என்ற பொய்களோடு..!!

வெளிநாட்டில் வாழ்க்கை
வளமான வசதிகளோடு
கை நிறையப் பணத்தோடு
மனிதர்களோ அசுர வேகத்தோடு..!!

மனது மட்டும்- எப்போதும்
வெறுமையோடும்!! ஏக்கத்தோடும்..!!
மனசுக்குள் ஊரின் வாசம்..
மழையில் ஊறிய மண்வாசமாய்….!!

கடல்தாண்டி செல்லும் கனவுகள் யாவும் 
கண்முன்னே வந்து நிற்க 
ஏங்குகிறேன் அம்மா மடியில் 
மீண்டும் ஒருகணம் தலை சாய்க்க....

என்றும் அன்புடன்
நித்யஸ்ரீ

அரிசிப்பருப்பு சாதம்


தேவையானவை
அரிசி --------------------------- = 2 கப் ( 2 சுட்டி or padi)
துவரம் பருப்பு -------------- =  1 கப் ( 1 சுட்டி)
வெங்காயம் ----------------- =  3 எண்ணம் (பெரியதாக நறுக்கியது)
பூண்டு ------------------------- =  15 பளு (15 pieces – slice ah narukunathu)
பச்சை மிளகாய் ----------- =   5 எண்ணம் (பெரியதாக நறுக்கியது)
புளி கரைசல் ---------------  =  புளிப்பு  தேவைக்கேற்ப … ( 2 to 3 தக்காளி சேர்த்து கொள்ளவும்)
மிளகாய் தூள் -------------- =  1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் ---------------- =  1 டீ ஸ்பூன்
கருவேப்பில்லை --------- =   தாளிக்க
கொத்துமல்லி தலை --- =   கார்னிஷ் பண்ண
கடுகு ------------------------- =   தாளிக்க
உப்பு -------------------------- =   ருசிக்கு ஏற்ப
ஆயில் ----------------------  =   4 to 5 டேபிள் ஸ்பூன்

முதலில் செய்ய வேண்டியது:
முதலில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைங்கள்… பின்னர் அரை மணிநேரம் கழித்து ....  அந்த அரிசியின் உள்ளேயே பருப்பு சேருங்கள்… இரண்டும் பிணைந்து களைந்து எடுங்கள்.
இப்பொழுது அரிசி பருப்பு ரெண்டும் நல்ல களைந்து வைத்து விட்டு நம் சமையலை தொடங்கலாம்.

சமைக்கும் முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வையுங்கள்… இப்பொழுது குக்கரில் எண்ணையை விடவும். எண்ணை சூடானதும் அதில் கடுகை போடுங்கள். கடுகு பொறிஞ்சதும், வெங்காயம், கறிவேப்பிலை பசைமிள்காய் எல்லாம்  சேர்த்துக்கொள்ளவும். அதை அரை மணி நேரம் சமைத்த பின்..... பூண்டு சேர்த்துவதக்கவும்
இப்பொழுது புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும்..... கொஞ்சம் நன்றாக கொதித்ததும்....உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.....
இப்பொழுது அரிசி பருப்பை இதனுடன் சேர்த்து, நன்றாக கிளறி விடவும். இதனுடன் தண்ணிர் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். இப்பொழுது உப்பு, காரம் சுவையை சரி பார்த்துக் கொள்ளுங்கள். போதவில்லை என்பவர்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.
(வழக்கமாக 1 சட்டி அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீர் விடுபவர்கள்.... இங்கே 2 சட்டி அரிசிக்கு 4 தம்ளர் தண்ணீர் + பருப்பு சேர்ப்பதால், 1.5 அல்லது 2 தம்ளர் தண்ணீர் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.)
இப்பொழுது பாதி கொத்தமல்லி தலை சேர்த்து குக்கரை முடி 4 லிருந்து 5 விசில் விட்டு இறக்கவும். ஆவி இறங்கவும் திறங்கள்...  கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை கிண்டி விட்டு சுட சுட சுவைத்தால்...  அதன் சுவை மிக நன்றாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...

( CURD, GHEE, PICKLES are best combination to eat with)..

குறிப்பு:  புளிக்கு பதில் தக்காளி சேர்த்துக் கொள்ளும் போது கொஞ்சம்  தேங்காய் துருவி போட்டு செய்தால் அது தனி சுவையாக இருக்கும்.

சமைத்து பார்த்து ருசித்து சொல்லுங்கள் நண்பர்களே........


என்றும் அன்புடன்
ரெஜினா
***********************************************************************
       என்ன வாசகர்களே, படித்து பார்த்துவுடன் சாப்பிட அசை வந்து விட்டதா..... இப்பொழுதே தேவையானதை வீட்டுக்கு வங்கி செல்லுங்கள். சமைத்து, ருசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
      நீங்களும் இதை போன்ற குறிப்புக்களை அனுப்புங்கள்.

சிந்தனை செய் மனமே…

 இது நமது அன்பு தோழி நித்யஸ்ரீயின் மற்றும் ஒரு படைப்பு, வாழ்கையில் வெற்றியை தேடி ஓடுபவர்களுக்கு ஒரு ஊக்க பானம் போன்றது இந்த வரிகள். படித்து பார்த்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே....

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்க தோற்றால் வாழ்கையே இழப்பு !
நீ பிறந்து தரித்திரமாக இருந்தாலும்
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் !
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை . .
ஆனால் அதற்கான தகுதி அனைவர்க்கும் உண்டு . . . முயன்றால் !
வாய்ப்புகளை பெறுபவன் அதிர்ஷ்டசாலி
உருவாக்குபவன் புத்திசாலி
அதனை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்பவனே திறமைசாலி !
நேற்று நடந்ததை நினைத்திருந்தால்
நாளை நடப்பது பிழையாகும் !
சிந்தித்து செயல்படு தோழனே வெற்றி உமக்கே !!


என்றும் அன்புடன்
நித்யஸ்ரீ 

வாழ்வின் திசை மாற்றம் !!!

 நமது அன்பு தோழி நித்யஸ்ரீ அவர்கள் நமக்கு, கனிணியில் வேலை செய்பவர்கள் இழந்துள்ள இழப்புகளை அழகிய கவிதையாக வடித்து அனுப்பி உள்ளார். வாசகர்கள் படித்து பார்த்து, தங்களது வாழ்த்துக்களை அவருக்கும், கருத்துகளை நமது தளத்திற்கும் தெரிவிக்கும்படி அன்போடு கேட்டு கொள்கிறேன்.


valkai epadi thisai marugirathu endru...
sirithai vilakugiren...
sindhithu parungal...
neengalum oruvarai koda irukalam....
அரை ஜான் அளவில் கருவறை 
அள்ளி முத்தமிடும் தாயின் கையில் சொர்க்கம் 
கேட்டதை வாங்கித்தரும் தந்தை தெய்வம் 
காலம் முழுதும் கை கொடுக்கும் கல்வி 
சின்ன சின்ன சண்டைகள் 
சிரிக்க வைக்கும் சிந்தனைகள் 
கண்ணீரை துடைக்கும் கரங்கள் 
காதல் கீதம் கொண்ட நெஞ்சம் 
நண்பர்கள் உறவாக 
நெஞ்சங்கள் மகிழ்வூட்ட 
நொடி முழுதும் நிம்மதி சந்தோசம் 
கவி பாடும் புலவனாய் 
காலம் முழுவதும் வாழ எண்ணிய நான் 
இன்று... 


வர்த்தகம் தேடி வாழ்கை அமைத்தேன் 
கை நிறைய பணம் 
கார் வீடு என்று அத்தனை வசதியும் கொண்டேன் 
காலத்தின் திசை மாற்றமோ 
இல்லை என் மனதின் திசை மாற்றமோ 
என் மனதில் துளியும் சந்தோசம் இல்லை 
பெற்ற பிள்ளையின் பரிவும் இல்லை 
மணம் புரிந்த துணையின் காதலும் இல்லை 


இப்போது என்னுகிறேன் 
எதற்கு இந்த கணினி பொறியாளர் என்ற பட்டம் 
என் பிள்ளை விட்டு விளையாடும் 
பட்டம் திசை மாறி பறப்பதை கண்டு !!

அன்புடன்
Nithyasree

எங்கே என் காதல்? - 1

   இது ஒரு சிறு கதையாக தான் ஆரம்பித்தேன். கொஞ்சம் நீளமாக வளருகிறது.... அதனால் இந்த முதல் இரண்டு பாகங்களை படிங்கள்... படித்து விட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...



அத்தியாயம் ஒன்று

மாலை நேரம்....
     சூரியன் தங்கநிறத்தில் ஜொலித்து கொண்டு கடல் அடியில் இறங்கினான். அதன் பிரதிபலிப்பாக கடல் அலைகள் தங்க நிறத்தில் எழுந்து ஆர்பரித்தன. இந்த காட்சியை காணும் அவளது விழிகளிலும் கண்ணீர் திவலை எழுந்து உருண்டோடி கன்னத்தில் தவழ்ந்தது.

     அவள் பெயர் மலர்மதி.  சமீபகாலமாக நடந்த ஒரு விபத்தில் தன்னை பற்றிய 3 வருட நினைவுகளை இழந்துவிட்டாள்.  3 வருடத்தில் என்னென்ன நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை. அனால், மனதில் மிக பெரிதாக ஒன்றை இழந்து விட்ட உணர்வு மட்டும் எழுந்து எழுந்து... கடல் அலை போல் மனதில் முட்டுகிறது.  அதன் தாக்கம் தான் இந்த அழுகை...

     இவளுக்கு 50 அடி துரத்தில் அந்த வாலிபன் நின்றிருந்தான். அவளை பார்த்து ரசித்தவன் மனதில் பலவிதமான எண்ணங்கள் உதயம் ஆகின... குறிப்பாக அவளது அழகு அவனை சில்லிட வைத்தது.  வட்ட முகத்தில் கன்னத்தில் இருந்து நாடி பாகம் குறுகி வந்திருந்தது. வளைந்த புருவத்தில் சிறியதாக உற்பத்தி ஆகி ஒரு மொட்டு போன்று முடிந்திருந்த மூக்கு.  சின்ன சின்ன வரிகளோடு சிங்காரமான உதடு. அவளது புருவத்தின் ஒரு ஓரத்தில் ஒரு தழும்பு. அந்த தழும்பு கூட அவளுக்கு ஒரு அழகாக தெரிந்தது. இதை அவன் துரத்தில் இருந்து பார்க்கவில்லை. அவளை கடந்து செல்லும் போது நின்று பார்த்தான். இப்போது தள்ளி நின்று அவளை வேடிக்கை பார்க்கிறான்.

   "ஹலோ, ஸ்டீபன் இப்ப எப்படி இருக்கீங்க...?" குரல் கேட்டு பின்னால் திரும்பி பார்த்தான் அவன். ஆம். அவன் பெயர் ஸ்டீபன். கூப்பிட்டது அவனது குடும்ப டாக்டர் மோகன். 

   "வாங்க டாக்டர், I am fine. மெண்டலி தான் கொஞ்சம் அப்நார்மலா பீல் பன்றேன். 

   "ஒ.. அப்படியா. வேற ஒன்னும் பிரச்னை இல்லையே."

 "வேற ஒன்னும் இல்லை டாக்டர். டாக்டர் அந்த பெண்ணை பாருங்களேன்... ரெம்ப அழகான பொண்ணு. பட், ஏதோ ரெம்ப சோகம் போல."

 டாக்டர் அவன் கட்டிய மலர்மதியை பார்த்தார். டாக்டரின் முகம் ஒரு மாறுதலுக்கு போனது.

     அப்போது மலர் திடீர்ரென மயங்கி விழுந்தாள்.

     ஸ்டீபன் வேகமாக அவளை நோக்கி ஓடினான். டாக்டர் பின்னால் ஒடி வந்தார். மலரை சுற்றி மக்கள் கூட்டமாக கூடினர்.

   "ஸ்டீபன், இந்த பெண்ணை தூக்கு. நம்ம ஹாஸ்பிடலுக்கு, கொண்டு போவோம்.
  
   டாக்டரும், ஸ்டீபனும் மலரை தூக்கி கொண்டு போக, கொஞ்ச தூரத்தில் ஐஸ் கிரீம் வாங்கி கொண்டு இருந்த மலரின் அண்ணன், விக்னேஷ் விபரீதத்தை உணர்ந்து அவர்களை நோக்கி ஒடி வந்தான்.

     டாக்டர் கரை நெருங்கி இருக்க...

   "நீங்க யார்?  என் தங்கச்சியை எங்க கொண்டு போறீங்க?" விக்னேஷ் கோபமாக கத்தினான்.

     காரில் மலரை கிடத்தி விட்டு இருவரும் திரும்பி பார்க்க, அவர்களை பார்த்ததும் விக்னேஷ் முகத்தில் அதிர்ச்சி அலைகள் எழும்பின.

     டாக்டரின் முகத்திலும் அதே அதிர்ச்சி அலைகள்.

     ஸ்டீபன் எந்த மறுத்தாலும் இல்லாமல் இருந்தான்.

   "ஒ.. சாரி சார். உங்க சிஸ்டர் மயங்கி விழுந்ததால... உதவலாம்னு நெனச்சோம்... இவர் சிட்டில பெரிய டாக்டர். வாங்க நீங்களும். டாக்டர் என்ன வேடிக்கை பாக்குறிங்க. உள்ள வாங்க.  சார் நீங்களும் தான்." ஸ்டீபன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டே சொன்னான்.

    விக்னேஷ் ஒன்றும் பேசாமல் உள்ளே ஏறினான். டாக்டரும் ஏறிக்கொள்ள, கார் டாக்டரது மருத்துவ மனை நோக்கி போனது.

எங்கே என் காதல்? - 2

அத்தியாயம் இரண்டு
 கல்யாணமாகி இன்றைக்கு ஒருவருடம் நிறைவு ஆகிறது. இன்று முதல் திருமண நாள். அந்த மகிழ்ச்சி மனம் நிறைய ராஜ் காரை ஓட்டினான். புதிதாக வாங்கிய பட்டு புடவை அவனருகில் தவழ்ந்தது. காரை வீட்டில் பார்க் செய்ததும் உள்ளே உற்சாகமாக ஓடினான்.

      "மலர், மலர் எங்கே இருக்கிறாய்?"

  "இங்க தான இருக்கேன்" படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தபடி மலர் கூறினாள்.

     "இன்னைக்கு நைட்க்கு இப்பவே பெட்ரூம் ரெடி பண்றியா டியர்...."

    "ஐயாவுக்கு, எப்ப பாரு... அதே நினைப்புதான....போங்க போய் குளிச்சிட்டு வாங்க..."

  "பிறகு... மனுசனுக்கு என்ன தேவைன்னு சொல்லு... உணவு, உடை, உறைவிடம், இருந்த போதுமா... உறவுன்னு ஒன்னு வந்தாதானே வாழ்கை பூர்த்தி ஆகுது..."

   "காதலிக்கும் போது கவிதைய பேசினிங்க.. இப்ப கல்யாணம் ஆன பின்னாடி தத்துவமா பேசுறிங்க..."

  "நான் மட்டுமா... சாக்ரடீஸ் இருக்காருல சாக்ரடீஸ்..... அவர்கூட ..." அவன் பேசி முடிப்பதற்குள் மலர் அவன் வாயை பொத்தினாள்.

    "போதும்.. போதும்... உங்க புராணம் போதும்...  போய் குளிச்சிட்டு வாங்க..."

  "மலர் அதுக்கு முன்னாடி... நீ ரெடி பண்ண பெட்டை ஒரு தடவை பயன்படுத்தி   பார்க்கலாமே..."

    "நோ.. நோ... நெறைய வேலை இருக்கு.. போங்க... போங்க..."

    "ம்கும்... ம்கும்... மாட்டேன்...."

  "இப்ப போங்கனா ....." குழந்தை போல அடம் பிடிக்கும் அவனை பாத்ரூம் நோக்கி தள்ளி கொண்டு போனாள்.

இரவு நேரம்...
   பௌவுர்ணமி நிலவு... 

  "அப்பப்பா... எவ்வளவு அலைச்சல். கல்யாண நாள் அதுவுமா... இத்தனை ப்ரோக்ராமா... கோவிலுக்கு போயிட்டு.... அப்பறம் முதியோர் இல்லம் போய்... அப்பறம், அனாதைகள் இல்லம் போய்.... எதுக்காக இத்தனை வேண்டுதல்..."
   ராஜ் கைலிக்கு மாறியபடி கேட்டான்.

  "எல்லா இடத்துக்கு போனதுக்கும் ஒரே கரணம் தான். இன்னைக்கு நம்ம கல்யாண நாள்."

 "அது சரி. அதுக்கு முதியோர் இல்லத்திற்கும், ஆனதை அசிரமதிற்கும், நம்ம கல்யாண நாளுக்கும் என்ன சம்மந்தம்?..."
   "வேற என்ன. உங்களுக்கும் அம்மா அப்பா இல்லை. எனக்கும் அம்மா அப்பா இல்லை... இந்த மாதிரி கவனிக்காம விட்ட பெரியவங்களை நாம போய் பார்க்கும் போது அவங்க ஆசிர்வாதம் கிடைக்கும் இல்லையா.. அதான்.
 அனாதை குழந்தைகளை கவனிக்கும்போது ஆண்டவன் நமக்கும் நல்ல குழந்தை கொடுப்பன்னு ஒரு நம்பிக்கை..."

   "கூடிய சீக்கிரம் உனக்கு பெஸ்ட் சமூகசேவகி விருது தந்திருவாங்க... நான் எனக்கு தெரிஞ்சி... சாமீ கும்பிட்டது கிடையாது... நான் கூட வந்ததெல்லாம் உனக்காகத்தான்."

    "எனக்கு தெரியாத.... நீங்க வருவது எனக்காகத்தான் என்று. ஐயாவுக்கு, அதுக்கு தான் இந்த பரிசு" மலர் அவனை நெருங்கி அவன் உதடுகளில் அவள் உதட்டை பொறுத்த போன நேரம்,

  "டிரிங்.. டிரிங்..."
 மலர் எரிச்சலோடு போனை எடுத்தாள். 

  "ஹலோ"

  "மேடம், நான் சார் பி.ஏ. சுவாதி பேசுறேன்" மறுமுனையில் குரல் ஒலித்தது.

  "என்ன விஷயம். இந்த நேரத்தில் போன்? அவர் ஆபீஸ்ல இருக்கும் போதே எதுனாலும் பேசி முடிங்க... வீட்டுக்கு கூப்பிடக் கூடாது."

  "இல்லை மேடம்.. சார் ஒரு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தார். அந்த நபரும் வந்து சாரை பார்க்க வெயிட் பன்றார்."

   "யாரா இருந்தாலும் சரி. ராஜ் இப்ப அங்க வர மாட்டார்."
    சொல்லிவிட்டு படக்கென்று போனை வைத்தாள்.

    "யார் அது போன்ல" ராஜ் கேட்டான்...

 "ம்.. உங்க பி.ஏ சுவாதி பேசினா... நீங்க யாருக்கோ அப்பாயின்மென்ட் கொடுதிருக்கிங்கனு கூப்பிடுற..."
     "நான் யாருக்கு... ஒ.. மை. காட்.. செம்புலிங்கம் என்பவர் ஆர்டர் விஷயமா பேசி விட்டு ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னார்...மறந்துட்டேன்."

    ராஜ் திரும்ப கோட் ஷர்ட்டுக்குள் நுழைய ஆரம்பித்தான்.

   "இப்ப நீங்க போக கூடாதுன்னு சொல்றேன்..." கட்டிலில் அமர்ந்து, உடை மற்றும் ராஜை வெறித்தபடி சொன்னாள்.

  "நோ டியர்... அது 10 லட்ச ரூபாய் ஆர்டர். நான் கண்டிப்பா போய் தான் தீரனும்."

  "இப்ப நீங்க போனிங்கனா... அப்புறம் நான் பேச மாட்டேன்..."

  "சாரி... மலர்... நான் போயே ஆகனும். ஜஸ்ட் ஒன் அவர்ல வந்துருவேன். ப்ளீஸ்டா செல்லம்... கோவிச்சுக்காத.."

    ராஜ் அவசர அவசரமாக கிளம்பி ஒடினான்.

  மலர் மணியை பார்த்தாள். கடிகரம் 10 என்று காட்டியது.  ஆசையுடன் கட்டிலுக்கு வந்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கடிகாரத்தில் முட்கள் நகர மாட்டேன் என்று அடம் பிடிப்பது போல இருந்தது.

   10.15....
   10.25....
   10.45....
   11.00...
    மலர் அப்படியே தூங்கி போனாள்.

   12.00 ராஜ் ரெம்பவும் சோர்வாக உள்ளே நுழைந்தான்... தூங்கி கொண்டிருந்த மலர் ராஜ் வரவும் எழுந்தாள்.

   "இது தான் ஒரு மணி நேரமா..."

   "சாரி... மலர்... பார்ட்டி கிளம்பவே பதினொன்னு பத்தானது. அப்பறம்... சுவாதிக்கு பஸ் வேற இல்லை. அதான் அவளை வீட்டில் விட்டு வர நேரம் ஆகி விட்டது."
  மலர் முறைத்தாள்.

  "எதுக்கு இப்படி முறைக்குற..."

 "நானும் உங்களுக்கு பி.ஏ.வா இருந்து தான் உங்களை கல்யாணம் பண்ணினேன். பார்ட்டிடா நீங்க பேசும் போது... அவளை கிளம்ப சொல்லிருக்க்கலாமே... எதுக்கு அவளை காத்திருக்க சொல்லி நீங்க கொண்டு போய் விடனும்."

   "அவளுக்கு வேலை இருந்தது... "

   "அப்படி என்ன வேலை... எனக்கு என்னவோ பயமா இருக்கு..."

   "என்ன பயம்..."

  "நான் ஆபீஸ்ல வேலை பார்த்தப்போ நீங்க என்னை வேலை செய்யவே விட மாட்டிங்க...   அடிக்கடி உங்க ரூம்க்கு கூப்பிட்டுக் கொண்டே இருப்பிங்க... இப்ப அதே மாதிரி சுவாதி உங்க ரூம்ல அடிக்கடி இருக்கிறதா... ஆபீஸ்ல வேலை பார்க்குற ஸ்டாப்ஸ் சொன்னங்க...
அதான் உங்களை அப்பவே போக வேண்டாம்னு சொன்னேன்..."

   " அப்பா நீ என்னை சந்தேகப் படுரியா...."

  "நான் உங்களை சந்தேகப் படலை... சுவாதி பத்தி யாரும் நல்லவிதமா சொல்லலை. அதான் எனக்கு பயம்..."

   "நீ தேவை இல்லாமல் பயப்படுற... சுவாதி அப்படிப் பட்ட பொண்ணு இல்லை. அவள் வோர்க்ல சின்சியர இருக்கிறதுனால அவளுக்கு நான் இன்க்ரிமென்ட் கொடுத்திருக்கேன்.அது பிடிக்காதவங்க அவளை பற்றி உன்னிடம் தவறாக சொல்லிருக்காங்க..."

    "ஒ... அவ நல்ல பொண்ணு தான் இல்லையா..."

   "ஆமா.."

   "அப்பா உங்கள் கோர்ட்ல தோள் பட்டையில் சிவப்பா இருக்கிற பொட்டு யாருடையது."

  "இது... இது.... செம்புலிங்கம் பொட்டு. அவர் கிளம்பும் போது, கட்டி பிடிச்சி தோளில் தட்டி கொடுத்து கிளம்பினர். அது தான்."

   "என்னால நம்ம முடியலை..."

  "மலர்... அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது... உனக்கு அவள் மேல நம்பிக்கை இல்ல விட்டாலும் என் மேல நம்பிக்கை இருக்கணும். அது இல்லேன்னா இந்த வாழ்க்கையை  நாம வாழுவதில் பயனே இல்லை."

  மலர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அதற்கு மேலே பேச விரும்பாமல் அப்படியே படுக்கையில் விழுந்து கண்களை மூடினான். நெடுநேரம் ராஜை வெறித்தபடி மலர் நின்றிருந்தாள். பிறகு, அவளும் படுக்கையில் சாய்ந்தாள்.

2 நாட்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இன்றி அமைதியாக கழிந்தது...

நான்கு மாதம் கழித்து ஒரு பூகம்பம் எட்டி பார்த்தது.

கோவையில் மக்கள் !!!

  என்ற தலைப்பில் இந்த இனைய தளத்திற்கு அன்பு தோழி நித்யஸ்ரீ அவர்கள் இந்த கவிதையை அனுப்பி இருக்கிறார்கள். வாசகர்கள் படித்து பார்த்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
    மேலும் என் அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...

குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த 
பெரு மரங்களையெல்லாம் 
நான்கு வழிப் பயணத்துக்காக, 
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும் 
விரட்டி அடித்தாயிற்று. 

நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும் 
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை 
அப்புறப்படுத்தியாயிற்று.

பச்சை வயல்களில் 
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில் 
தலைவர்களிடையே 
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று.

பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில் 
அகதிகளாக்கியாயிற்று.

மரங்களை இழந்த பறவைகளும் 
இயற்கையை இழந்த மனிதனும் 
தங்களது மொழியினை மறந்தபடி 
காலத்தின் வேகத்துக்கு 
அடிபணிந்து அன்னத்திற்காக 
பறந்து கொண்டிருக்கின்றனர் 
மவுனத்தைச் சுமந்தபடி. 

என்றும் அன்புடன்
நித்யஸ்ரீ 

சதி

Click Here

      இது என்னுடைய முதல் சிறுகதை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

கடவுள் வாழ்த்து

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.