உழவர்களின் உன்னத வாழ்வையும், அவர்களின் வேதனையையும் அற்புதமாக சொல்லியிருக்கிறார் கெளதம் அவர்கள்... அவர்களது இந்த கவிதைக்காக தளத்தின்
நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்....
வானம் பார்த்த பூமி கொண்டேன்;
வேளாண் சார்ந்து வாழ்க்கை செய்தேன்;
அத்துனை பெரும் ஆக்கி பொங்க
நித்தம்நித்தம் பாடு பட்டேன்; இரத்தம்
கலந்த வியர்வை சிந்தி!
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
நெருப்பைக் கொண்டேன் சூர்யபார்வையில்!
பட்ட கஷ்டமும், கொட்டிய வியர்வைகடலும்
அர்த்தம் பெற்றது அறுவடை நாளில்
பெற்ற பலனை நாங்களும் அடைந்தோம்
நாட்டிற்கும் கொடுத்தோம் தன்னிறைவுக்காக!
பசுமைபுரட்சி திட்டங் கொண்ட நாட்டிற்கு
செருப்பை தேய்ந்து வெற்றிகளை குவித்தோம்!
உழைத்தோம் உழைத்தோம்! எதிர்பார்ப்பின்றி
பலனை அளித்தோம் ஏற்றுமதியாக!
அன்றும் இன்றும் என்றும் என்
தொழிலே உலகின் மூலம்!
அன்று பாடுபட்டோம்; அள்ளி கொடுத்தோம்,
இன்றும் பாடுபடுகிறோம் அரைவயிறு கஞ்சிக்காக!
ஒட்டிய வயிறும் குழிவிழுந்த கன்னமுமே,
என் மக்களின் நிரந்தர சொத்தா!
மாமனொருவன் எலிக்கறி உண்டான்!
தாத்தன்காரன் விஷம்குடித்து மாண்டான்!
உழைத்து உழைத்து உணவு கொடுத்தோம்,
இன்று உழைத்து அலுத்து வானம்
பார்க்கிறோம் வறுமையிலே!
மாற்றம் ஒன்றே மாறாதது என்றும்,
மாற்றத்தின் விளைவை காலம் ஏற்கையில்,
இறக்குமதியாம்! அரிசி இறக்குமதியாம்!
நாட்டை காத்தோம் வளர்த்தெடுத்தோம்,
நன்றிகடன் செய்த நாடு என்மக்களுக்களித்த
சன்மானம் வறுமையும் மரணமுமா!
ஆட்சிக் கொருமுறை வாக்குறுதி!
அதிகக் கடனாம், தள்ளுபடியாம்!
என் மக்களிடம் வந்து சேர்வதில்லையே!
இடையிடையே எத்தனை எத்தனை
மனிதர்கள் பிணந்திண்ணி கழுகுகளாக!
அனுபவிக்கும் அரசுகடனையும் தள்ளுபடியையும்!
உதைபட்ட என் மக்கள் மார்பும்
துடிக்கிறது உணவுக்காக!
வாழ்க வளமுடன்
மு. கெளதம் முருகேசன்
No comments:
Post a Comment